கள்ளக்குறிச்சியில் பிரம்மாண்டமாக திறக்கப்பட்ட ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை நடிகை கீர்த்தி சுரேஷ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் எம்.எல்.ஏ அருண் விக்னேஷ் பங்கேற்பு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 16 May 2026

கள்ளக்குறிச்சியில் பிரம்மாண்டமாக திறக்கப்பட்ட ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை நடிகை கீர்த்தி சுரேஷ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் எம்.எல்.ஏ அருண் விக்னேஷ் பங்கேற்பு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

 


கள்ளக்குறிச்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையின் திறப்பு விழா நடைபெற்றது. திரைப்பட நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருண் விக்னேஷ் ஆகியோர் இணைந்து ரிப்பன் வெட்டி புதிய நகைக்கடையை திறந்து வைத்தனர்.


கள்ளக்குறிச்சி நகரின் முக்கியப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய நகைக்கடை திறப்பு விழாவை முன்னிட்டு காலை முதலே ஏராளமான பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் திரண்டனர். நடிகை கீர்த்தி சுரேஷை காண ரசிகர்கள் பெருமளவில் குவிந்ததால் பரபரப்பான சூழல் நிலவியது.


திறப்பு விழாவில் பாரம்பரிய நகைகள், வைர நகைகள், திருமண நகை சேகரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்பிலான நகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. புதிய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சிறப்பு தள்ளுபடி சலுகைகள் மற்றும் பரிசுத் திட்டங்களும் அறிவிக்கப்பட்டன.


விழாவில் பேசிய நிர்வாகிகள், கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு தரமான நகைகளை நம்பிக்கையுடன் வழங்கும் நோக்கில் இந்த புதிய கிளை தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.


இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள், வணிகர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு புதிய கடை திறப்பை வாழ்த்தினர். விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டிருந்தன.


D.செல்வம் 

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் 

தமிழக குரல்.

No comments:

Post a Comment

Post Top Ad